பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் அடுத்து நடிகர் தனுஷ் படத்தை இயக்க போவதாக தகவல் வெளியானது.

 

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.படத்தில் சொல்ல வந்த கருத்துகளை மிகத் தெளிவாக கூறினார் மாரி செல்வராஜ்.தற்போது அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த நடிகர் தனுஷ் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை வெகுவாக பாராட்டினார்.அத்துடன் தான் நடிக்கும் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க போவதாகவும் அவர் கூறினார்.மேலும் அந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.