இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை திரைப்படம் 80களின் ஆரம்பத்தில் வந்த இந்த படத்தில் நடித்திருப்பவர் ராமகிருஷ்ணா. கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவரான இவர் கன்னடத்தில் 200 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.

கன்னட நடிகர் ரவிச்சந்திரன், அம்பரீஷ் ஆகியோரின் நெருங்கிய நண்பரான இவர் 35 வருடங்களுக்கு மேல் இன்னும் நடித்து வரும் நிலையிலும் காலங்கள் மாறி கார்களும் மாறிவிட்ட நிலையில் மிக பழமையான 800 காரையே பயன்படுத்தி வருகிறாராம்.

இந்த கார் பயன்படுத்துவது குறித்து அவர் பெருமிதமும் தெரிவித்துள்ளார் இந்த காரை தொடர்ந்து பயன்படுத்துவது மனதுக்கு நிறைவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.