தற்போது தனுஷ் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இதை பாலாஜி மோகன் இயக்குகிறார். மேலும் கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

மாரி 2 படத்தில் தற்போது இன்னொரு நபா் இணைய உள்ளார். அது தனுஷ் இயக்கி பவா் பாண்டி படத்தில் ராஜ்கிரண் பேரனாக நடித்த மாஸ்டா் ராகவ் தான் இந்த படத்திலும் நடிக்கிறார். இவா் ஏற்கனவே சேதுபதி படத்தில் சின்ன வயது விஜய்சேதுபதியாக மாஸ்டா் ராகவ் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.