திராவிட இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் மதிமாறன். திராவிடர் கழக சம்பந்தமான மேடைகள், பொது மேடைகள் பலவற்றில் திராவிட ரீதியான கருத்துக்களை சிறந்த முறையில் பேசுபவர் இவர்.

சென்ற வாரம் நடந்த சர்க்கார் பட ஆடியோ வெளியீட்டின் போது விஜய் தனது முதல்வர் கனவு குறித்து பேசியதும்,  கருணாநிதி அவர்களின் பேரனும், சர்கார் படத்தயாரிப்பாளருமான கலாநிதிமாறன் முதல் அனைவரும் தளபதி தளபதி என அடிக்கடி உச்சரித்தது விஜய் ரசிகர்களை சந்தோஷமடைய செய்தாலும் திமுகவினரை கொஞ்சம் அசைத்து பார்த்துள்ளது உண்மை.

இந்நிலையில் சென்னையில் ஸ்டாலின் முன் நடந்த கலைஞர் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிட கழக தலைவர் மதிமாறன்  உலகத்தில் புரட்சி தலைவர் என்றால் ஒரே புரட்சி தலைவர் அவர் லெனின் தான்.

ரஷ்ய புரட்சியாளர் ஸ்டாலின் அவர்களின் பெயரை தாங்கியுள்ள ஸ்டாலின் மட்டுமே தளபதி அந்த பெயரை சொல்லும்போதே ஒரு நல்லுணர்வு நமக்கு வரும் என்றும்,

படத்தில் மீந்து போன வசனங்களை எல்லாம் பேசுபவர்கள் தளபதி ஆகி விட முடியாது என விஜயை கடுமையான முறையில் பேசினார். இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது உண்மை.

சமூக வலைதளங்களில் நேற்றில் இருந்து ஹாட் டாபிக் இதுதான்.

இரண்டு நாள் முன்புதான் நடிகர் கருணாகரன் விஜயை விமர்சித்து அந்த பிரச்சினையே இன்னும் தீராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.