ஜாங்கிரிக்கு கை கொடுக்கும் பரோட்டா சூரி!!!

03:38 காலை

விஜய் டிவியில் லொல்லு சபா நிகழ்ச்சியில் தொடங்கி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் காமெடியன் சந்தானத்திற்கு ஜோடியாக ஜாங்கிரி என்னும் கேரக்டர் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி அனைவரயும் கவர்ந்தவர் மதுமிதா.

ராஜா ராணி, அட்டகத்தி மற்றும் மிரட்டல் என்னும் படங்களில் நடித்தவர். மேலும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் காமெடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த படத்தின் சிறந்த காமெடி நடிகை என்ற விகடன் விருதையும் பெற்றார்.

சந்தானத்துடன் சில படங்களில் நடித்து வந்தார். பிறகு சந்தானம் ஹீரோவான நடிக்க ஆரம்பித்ததால் மதுமிதாவை கண்டுகொள்ளவில்லை.மேலும் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படங்களில் காமெடி வேடம் கூட தரவில்லை என கவலையில் உள்ளார்.

இந்நிலையில் நளனும் நந்தினியும், ஜில்லா, வெள்ளைக்காரதுரை படங்களில் தனக்கு வாய்ப்பு கொடுத்தார் காமெடி நடிகர் சூரி. இதனால்சூரியை நம்புகிறார் மதுமிதா.இதை தொடந்து விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் மீண்டும் சூரியுடன் இணைகிறார். இதனால் மகிழ்ச்சியில் உள்ளார்.

மேலும் இந்த படம் வடசென்னை கதையில் உருவாகிறது. இவர் வடnசென்னையை சேர்த்தவர். இதுவரை வடசென்னை தமிழ் பேசும் வாய்ப்பு முழுமையாக கிடைக்காத நிலையில் இந்த சான்ஸ் கிடைத்த சந்தோஷத்தில் உள்ளார். மேலும் இந்த படத்தில் வடசென்னை தமிழ் பேசி அசத்த வேண்டுமென திட்டமிட்டுள்ளார்.

The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com