பல புதுமுக நடிகர்கள், இயக்குனர்களை திரையுலகில் அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனராக களமிறங்கியுள்ள முதல் படம் ‘மாயவன்’

போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷான் தற்செயலாக தீனா தனது மனைவியை கொலை செய்வதை பார்க்கின்றார். அவரை பிடிக்கும் முயற்சியில் பலத்த காயமடையும் சந்தீப், நூலிழையில் உயிர் தப்புகிறார். இதில் தீனா கொலை செய்யப்படுகிறார்.

இந்த நிலையில் உடல்நிலை தேறி மீண்டும் பணியில் சேர மனோதத்துவ டாக்டர் லாவண்யா திரிபாதியிடம் சான்றிதழ் வாங்கி வரும்படி உயரதிகாரி அறிவுறுத்துகிறார். ஆனால் லாவண்யா, அவரது மனநிலை பணியில் சேரும் அளவுக்கு இல்லை என்று கூற, வேறொரு டாக்டரிடம் சான்றிதழ் வாங்கி பணியில் சேருகிறார் சந்தீப்

இதையும் படிங்க பாஸ்-  பட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ - விமர்சனம்

இந்த நிலையில் தீனா கொலை செய்த அதே பாணியில் பிரபல நடிகை ஒருவரும் விஞ்ஞானி ஒருவரும், உளவியல் துறை நிபுணர் ஒருவரும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சந்தீப் கையில் வருகிறது. லாவண்யா திரிபாதி மற்றும் பகவதி பெருமாள் உதவியுடன் துப்பு துலங்கும் சந்தீப்புக்கு பல விசித்திர தகவல்கள் கிடைக்கின்றது. சாகாவரம், கூடுவிட்டு கூடு பாயும் முறையை டெக்னாலஜி பயன்படுத்தும் முறை, அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை குறித்து தகவல்கள் சேகரிக்கும் சந்தீப் இறுதியில் கொலைகாரனை என்ன செய்தார்? என்பதுதான் மீதிக்கதை

இதையும் படிங்க பாஸ்-  மனைவிக்கு வேறு உறவு – மகனுடன் தற்கொலை செய்துகொண்ட கணவன் !

‘மாநகரம்’ படத்தில் தனது நடிப்பு திறமையை பக்காவாக வெளிப்படுத்திய சந்தீப்கிஷான், இந்த படத்தில் போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். லாவண்யாவுடன் முதலில் மோதல் பின்னர் சமாதானம், பகவதி பெருமாளுடன் இணைந்து துப்பு துலக்குதல், விசாரணையின்போது ஒவ்வொரு முறையும் கிடைக்கும் ஏமாற்றம், இறுதியில் ஜாக்கி ஷெராப்புடன் மோதும் ஆக்சன் என படம் முழுவதும் தனது பங்கை சரியாக செய்துள்ளார் சந்தீப். லாவண்யாவின் மனோதத்துவ டாக்டர் நடிப்பு கச்சிதம். நல்லவேளை இந்த விறுவிறுப்பான படத்தில் டூயட், காதல் ஆகியவற்றை இயக்குனர் தவிர்த்துள்ளார்

பகவதி பெருமாள், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர்களின் நடிப்பு அருமை. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ஜிப்ரானின் இசையில் பின்னணி சூப்பர். கேமிராமேன் கோபி அமர்நாத், ஆர்ட் டைரக்டர் கோபி ஆனந்த் பணி சூப்பர். நலன்குமாரசாமியின் திரைக்கதை, வசனம் படத்திற்கு முதுகெலும்பு. குறிப்பாக கே.எஸ்.ரவிகுமார் பேசும் ஒவ்வொரு வசனமும் அருமை

இதையும் படிங்க பாஸ்-  'பாகுபலி 2' படம் பார்க்க விடுமுறை கேட்ட போலீஸ்காரர்

சாகாவரம் பெற வேண்டிய ஒரு விஞ்ஞானி செய்யும் ஆபத்துக்குரிய ஆய்வை டெக்னாலஜியாக சாதாரண ஆடியன்ஸ்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் படத்தை நகர்த்தி செல்வது சி.வி.குமாரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. இனி இவர் இயக்குனர் பணியிலும் தாராளமாக தொடரலாம். மாயவன், மனதை வெல்பவன்.