சி.வி.குமாரின் ‘மாயவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் முதன்முதலில் இயக்கிய ‘மாயவன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியே திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருசில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படம் செப்டம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் சற்றுமுன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

சென்சாரில் ‘யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தில் சந்தீப்கிஷான், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், அக்சரா கெளடா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், லியோ ஜான்பால் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.