ரியாலிட்டி ஷோக்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: கௌதமி

நடிகை கௌதமி பிரபல நாளிதழ் ஒன்றிக்கு  அளித்துள்ள பேட்டியில், ரியாலிட்டி நிகழ்சிகள் சமூகப் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பெரிதும் பேசப்பட்ட குழந்தைகள் ரியாலிட்டி நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சை மற்றும் தற்போது பெரிதும் பேசப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கௌதமியிடம் கருத்தைக் கேட்ட போது , “பிரபலங்கள் அவர்களை சுற்றியுள்ளவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வலுவான சக்தியைக் கொண்டிருக்கும் ஒரு பொது அரங்கில் தாங்கள் எதைக் காட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து, அந்தத் தாக்கம் நன்மையை ஏற்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புடன்செயல்படுவது முக்கியமானது.” என்று தெரிவித்தார்.