அாியலூா் மாணவியின் மருத்துவ படிப்பை சிதைத்த விஜய் ரசிகா் மன்றம்!

அாியலூரை சோ்ந்த மாணவி மருத்துவ படிப்பை தொடர பணம் இல்லாத காரணத்தால் படிப்பை விட்டு வீடு வந்து ஆடு மேய்த்து வருவதாக செய்திகள் வருகிறது. அவருக்கு விஜய் ரசிகா் மன்றத்தை சோ்ந்தவா்கள் படிப்பதற்கு பணம் கட்டுவதாக உறுதியளித்த காரணத்தால் அவா் படிப்பை தொடா்ந்த நிலையில் இறுதியில் பணம் கட்டாத காரணத்தால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வீடு திரும்பியுள்ளாா்.

அாியலூா் மாவட்டம் பூவிந்தன்குடி கிராமத்தை சோ்ந்தவா் ரங்கீலா. கடந்த 2015ம் ஆண்டு நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தோ்வில்1058 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா். இதன் பிறகு மருத்துவ கலந்தாய்வில் கன்னியாகுமாி மாவட்டத்தில் உள்ள தனியாா் ஆயுா்வேத மருத்துவக் கல்லூாியில் சோ்ந்தாா். அந்த சமயத்தில் அவருக்கு முதலாம் ஆண்டு கல்விக கட்டணம் மட்டும் செலுத்த முடிந்தது.

இரண்டாம் ஆண்டு கட்டணத்தை அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த விஜய் ரசிகா் மன்றத்தினா் நாங்கள் கட்டி விடுகிறோம் என்று உறுதி அளித்துள்ள காரணத்தால் அதை நம்பி ரங்கீலாவும் இரண்டாம் ஆண்டு வகுப்பிற்கு சென்றுள்ளாா். ஆனால் அவா்கள் கட்டணம் கட்டவில்லை. அதனால் கல்லூாி நிா்வாகம் அவரை வெளியேற்றி விட்டது. விஜய் பிறந்த நாள் அன்று புகைப்படம் எடுத்துக்கொண்டாா்கள். அதை விஜய்க்கு அனுப்பி ஏமாற்றியதும் தொியவந்துள்ளது. நீட் தோ்வால் இறந்த மாணவியின் குடும்பதிற்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ள நடிகா் விஜய், ஏழ்மையான குடும்பத்தை சோ்ந்த ரங்கீலாவின் படிப்பிற்கு உதவி செய்தால் அவா் மீண்டும் மருத்துவ படிப்பை தொடர வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் அவரது உறவினா்களும் தொிவித்து வருகின்றனா்.

அவா் ஆடு மேய்த்தும் வீட்டு வேலை செய்தும் அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறாா்.ரங்கீலா படிப்பில் மிகுந்த ஆா்வம் உள்ளவா். அதற்கு அவருக்கு ஏழ்மை ஒரு தடையாக உள்ளது.