தற்போது நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் நியூஸ்லாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடி வருகின்றன. நேற்று இந்தியா வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் மழை காரணமாக விளையாட்டு ரத்து செய்யப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இந்தியா அடுத்த போட்டிக்கு செல்ல முடியும் என்கிற நிலையில், முதலில் விளையாடிய நியூஸ்லாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணியில் 6 விக்கெட்டுகள் மளமளவென சரிய 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்தியா தோல்வி அடைந்து விடும் என கிரிக்கெட் ரசிகர்கள் நினைக்க தொடங்கி விட்டனர். இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் இந்தியன் அணியை கிண்டலடித்து மீம்ஸ்களை போட துவங்கி விட்டனர்.

ஆனால், ஜடேஜாவும் , தோனியும் இணைந்து விளையாட்டின் போக்கையே மாற்றிவிட்டனர். ஜடேஜா தற்போதையை நிலவரப்படி 52 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றியை நோக்கி எடுத்து சென்றுவிட்டார். இது தொடர்பாகவும் மீம்ஸ்கள் வலம் வருகின்றன.