ஐஸ்வர்யா தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஐ.நா. சபை விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இதன் மூலம் உலக அளவில் ஐ.நா.வில் நடனமாடிய முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஆனால், அவர் ஆடியது பரத நாட்டியமே இல்லையென்று புகார் எழுந்தது. அவரின் நடனம் குறித்து சில பரத நாட்டிய கலைஞர்கள் கிண்டலடித்து விமர்சனம் செய்தனர். எனவே, எதற்கெடுத்தாலும் மீம்ஸ் போடும் நெட்டிசன்கள், ஐஸ்வர்யா தனுஷின் நடனத்தை கிண்டலடித்து, ஏகப்பட்ட மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்.