பேட்ட படம் பற்றி வெளியான மீம்ஸ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பேட்ட திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியானது.

இதையும் படிங்க பாஸ்-  பேட்டயை பாராட்டும் வெறித்தனமான ரசிகர் - வீடியோ பாருங்க

இப்படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினி ஸ்டைலை இப்படத்தில் பார்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், அண்ணாமலை படத்தில் மனோரமா பேசும் வசனத்தை எடுத்து நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள மீம்ஸ் பலரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக, இந்த மீம்ஸை மு.க.அழகிரியின் மகன் தயா அழகிரி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.