அஜித் உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்த மீனா, திருமணத்திற்கு பின் அதிகமான படங்களில் நடிக்கவில்லை

ஆனால் த்ரிஷ்யம்’ படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தில் நாயகிக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ்-பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் படத்தில் பூஜாவுக்கு அம்மாவாக நடிக்க நடிகை மீனா ஒப்புக்கொண்டுள்ளாராம். அம்மா கேரக்டர் என்றாலும் அழுத்தமான கேரக்டர் என்பதால் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.