லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி முதலானோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

கடந்த 2006ல் படம் வந்த போது ராஜ்கிரணின் கனமான பாத்திர படைப்பு பரபரப்பாக அனைவராலும் பேசப்பட்டது. தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளின் முக்கிய மனிதர் என்ற கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சண்டைக்காட்சிகளிலும் ராஜ்கிரண் அசத்தலாக நடித்திருந்தார்.

அதுபோலவேயான கதாபாத்திரம் சண்டக்கோழி 2விலும் ராஜ்கிரணுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை வித்தியாசமாக துரை அய்யாவை மீட் பண்ணுங்க என படக்குழுவினர் விளம்பரம் செய்து வருகின்றனர்.