கேரளாவில் நிச்சயதார்த்தில் கலந்து கொள்ள கொச்சி சென்ற நடிகை கார் விபத்தில் சிக்கி ஒரு மணிநேரம் உயிருக்கு போராடினார். அப்போது அவரை காப்பாற்றாமல் செல்போனில் புகைப்படம் எடுப்பதில் தான் ஆர்வம் காட்டியுள்ளனர். அந்த நடிகையை ஒரு போட்டோகிராபர் வந்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை இதுகுறித்து பேசியுள்ளார்.

மேகா மேத்யூ மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது மேகா மோகன்லாலின் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் மம்மூட்டியின் மாஸ்டர்பீஸ் நடித்தவர். மேலும் இவர் மலையாளத்தில் ஒரு மெக்ஸிகன் அபரதா, தியான், ஆதம் ஜோன், சகாவின்டே ப்ரியசகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேகா தனது அண்ணாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள கொச்சியிலிருந்து கிளம்பினார். காரை அவரே ஒட்டி சென்றார். அந்த சமயம் மழை பெய்து கொண்டிருந்தது.

இதையும் படிங்க பாஸ்-  16 வயதில் நான் கற்பழிக்கப்பட்டேன் - பிரபல தொகுப்பாளினி பகீர் தகவல்

எர்ணாகுளம் அருகே முளன்துருத்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது நடிகை மேகாவின் கார் மோதியுள்ளது. எதிரே வந்த கார் மோதிய பின் நிற்காமல் சென்று விட்டது. எதிரே வந்த கார் மோதியதில் நடிகை மேகாவின் கார் தலைகீழாகக் கவிழந்ததால் அவர் காருக்குள்ளே மயக்கம் அடைந்து விட்டார். அந்த பகுதி அருகே வந்தவா்கள் காருக்குள் மாட்டியவர் இறந்திருக்கலாம் என்று எண்ணி தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். அவரை காப்பாற்ற யாரும் முன்வராமல் இப்படி புகைப்படம் எடுப்பதில் தான் கவனம் செலுத்தியுள்ளார்கள். மேகா காருக்குள் ஒரு மணிநேரமாக உயிருக்கு போராடியுள்ளார். அதன்பின் அந்த பக்கமாக வந்த புகைப்படக் கலைஞர் தான் அவரை காரிலிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  சக நடிகைக்கு லிப்கிஸ் கொடுத்த பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா?

இந்நிலையில் விபத்தில் சிக்கிய நடிகை மேகா மேத்யூ இதுபற்றி கூறியதாவது, அண்ணாவின் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள சென்றேன். மழை பெய்து கொண்டிருந்தது. நான் தான் காரை ஒட்டி சென்றேன். அப்போது எதிரே வேகமாக வந்த கார் என் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. எதிரே வந்து கார் வேகமாக இடிந்த காரணத்தால் என்னுடைய கார் தலைக்கீழாக கவிழ்ந்து விட்டது. காருக்குள் நான் மாட்டி மயக்கமடைந்து விட்டேன். என்னை காப்பற்ற யாரும் வராமல் செல்போன்னில் புகைப்படம் எடுப்பதில் தான் கவனம் செலுத்தினார்கள். எனக்கு இது வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அப்போது அங்கு வந்த போட்டோகிராபர் தான் என்னை காப்பாற்றினார். இதனால் தான் நான் உயிர் பிழைத்தேன் என்று கூறினார்.