இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் தனுஷை வைத்து இயக்கியிருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

மருமகன் தனுஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மாமனார் ரஜினி படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளது தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை மேகா ஆகாஷ் மீது தமிழ் சினிமாவின் பார்வை திரும்பியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிப்பார் என கிசுகிசுக்கப்பட்டது, ஆனால் அவர் ரஜினிக்கு மகளாக இந்த படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

தன்னுடைய மகள் வயது நடிகைகளுடன் ஜோடியாக ரஜினி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் ரஜினியே அது குறித்து வெளிப்படையாகவே காலா இசை வெளியீட்டு விழாவில் வருத்தப்பட்டார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் மகள் கேரக்டரில் நடிக்க மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் மேகா நடித்த காட்சியை ரஜினிக்கு போட்டுக்காட்டி அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டு சம்மதம் வாங்கப்பட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.