தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தமிழில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அர்ஜூன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்

இதையும் படிங்க பாஸ்-  சுசீந்திரனின் ஜீனியஸ் படத்தின் இசை இன்று வெளியீடு

இந்த படத்தில் சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ பட நாயகி மெஹ்ரீன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் நடித்திருந்தாலும் அவருடைய காட்சிகள் அனைத்தும் கட் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தேவரகொண்டா படத்திலாவது அவரது காட்சி படத்தில் இடம்பெறும் என்று கருதப்படுகிறது

இதையும் படிங்க பாஸ்-  விஜய் ஆண்டனி கேரக்டரில் 'அர்ஜூன் ரெட்டி' ஹீரோ

அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நாசர் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளனர்,.