Home சற்றுமுன் மீம்ஸ் தயாரிப்பாளர்களாக உருவெடுக்கும் இளைஞர்கள்

மீம்ஸ் தயாரிப்பாளர்களாக உருவெடுக்கும் இளைஞர்கள்

தமிழ் சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் தற்போது ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது அது மீம்ஸ் க்ரியேட் செய்வது. முன்பெல்லாம் வார, மாத இதழ்களில் அரசியல்வாதிகள், மன்னர்கள், குடும்பத்தலைவி, மாமியார், மருமகள் என்று சிறு சிறு துணுக்குகள்தான் இடம்பெறும்.

சில வருடமாக இந்த சமூக வலைதள அசுர வளர்ச்சியால் இந்த மீம்ஸ் கிரியேஷன் செய்வது இளைய தலைமுறையினரிடையே வேகமாகி உள்ளது.

பல மீம்ஸ்கள் நம் அபிமான சினிமா நடிகர்கள் சார்ந்தும் அவர்கள் படங்களின் கதாபாத்திரங்கள் சார்ந்தும் உள்ளது. இவை வயிறு குலுங்க நம்மை சிரிக்க வைப்பதாகவும் உள்ளது. இதில் மீம்ஸ் வீடியோ கிரியேசன்சும் ஆச்சரியப்பட வைக்கிறது நம்மை சந்தோஷக்கடலில் தள்ளுகிறது.

இவைகளை அதிக சந்தோஷத்துடன் நம் செல்பேசியில் பார்த்தாலும் சில நேரங்களில் இந்த மீம்ஸ் கிரியேசன்ஸ்கள் ஓவர் டோஸாக வந்து நம்மை வெறுப்பேற்றவும் தவறவில்லை. எதற்காவது மீம்ஸ் கிரியேசன்ஸ் என்ற நிலை போய் எதற்கெடுத்தாலும் மீம்ஸ் என்ற நிலை உருவாகி வருகிறது.

உதாரணமாக நாம் ஆயிரம்தான் நம்மை ஆளும் அரசியல்வாதிகளையும் முதல்வர்களையும் விமர்சித்து சிரிக்க வைத்து மீம்ஸ் கிரியேட் செய்தாலும் அதில் ஒரு கண்ணியம் வேண்டும்.

இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் சில நேரங்களில் அரசு சார்ந்த அதிகாரிகள், முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்யும்போது தவறான அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளை பிரயோகிக்கின்றனர் இது தவறான முறையாகும்.

ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ செய்யும் எந்த ஒரு தவறான திட்டங்களையும் செயல்களையும் நாகரீகமான முறையில் மீம்ஸ் கிரியேட் செய்து விமர்சனம் செய்வதே சிறப்பான முறையாகும். தவறான வார்த்தைகளை கொண்ட மீம்ஸ்களை சில முன்னணி ஊடகங்களும் தங்கள் பக்கங்களில் வெளியிடுவது வருத்தத்திற்குரிய செயலாகும்.

நல்ல மீம்ஸ்களை சரியான விமர்சனங்களை வைக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்களை ஆதரிப்போம் தவறான அநாகரீகமற்ற வார்த்தைகளை கொண்டு உயர்ந்த பதவியில் இருப்பவர்களை மீம்ஸ் கிரியேட் செய்வது தவறான முறையாகும்.