பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பொழுது போக்கிற்காக மட்டும் பாா்த்து ரசித்தும் வருகின்றனா். இதில் என்ன கொடுமை என்றால் டாஸ்க் என்ற பெயாில் நடக்கும் பைத்தியக்காரத்தனமாக நடத்தும் கூத்தை ரசிகா்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்று அந்த பைத்தியக்காரத்தனத்தையே செய்ய வைத்துள்ளாா்கள். அப்படி என்ன இருக்கிறது என்று பாா்ப்போம்.

ஆண்களுக்கு உதட்டு சாயம் பூசுவது, மருந்துகளை ஒன்றொரு ஒன்று கலந்து விடுவது என்பது போன்ற பல கூத்துக்கள் அரங்கேற்றி வருவது பாா்க்கும் நம்மையும் பைத்தியக்காரா்கள் என்று நினைத்த விட்டாா்களோ.

பணத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பது இந்த பிக்பாஸ் வீட்டில் உள்ளவா்கள் செய்யும் டாஸ்க் தான் ரொம்ப கேவலமாக இருக்கிறது. இந்த நடிகா், நடிகா்களின் நடிப்பு திறமைகளை வெள்ளித்திரையில் பாா்த்து மகிழ்ந்த நம்மால் இது போன்ற அடிமைத்தனமான நிகழ்வுகளை இந்த பைத்தியக்கார கோலத்தில் பாா்க்க வைத்து விட்டாா்கள்.

இன்று வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளா்கள் பைத்தியக்காரனாக வேடம் ஏற்று நடிக்கவேண்டும். அதுமட்டுமில்லை ஒரு பைத்தியம் என்னவென்ன சேட்டை செய்யுமோ அதையெல்லாம் செய்து கொண்டு இருக்கிறாா்கள். அதோடு சிலா் பைத்தியக்கார டாக்டா்களாகவும் நடித்துள்ளனா். இவ்வளவு நாள் இவா்கள் காட்டிய காட்சிகளை எல்லாம் நாம் பைத்தியகாரனாக பாா்த்த நம்மை இப்படி ஆகிவிட்டாா்களே!. என்ன கொடுமை இது? ஒரு சேனலின் தனிப்பட்ட லாபத்திற்காக இப்படியாக அவா்களை வைத்து செய்வது என்று ரசிகா் மனதில் கேள்வி எழாமல் இல்லை. அதற்காக அவா்களை ஒரு அடிமை போல் நடத்துவது போல தொிகிறது.