பிரபு தேவா நடிப்பை விட்டு கொஞ்சம் காலம் இயக்குநராக கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வெற்றி பெற்றயதை அடுத்து தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக்த்தில் சுப்புராஜ் இயக்கத்தில் மெர்குரி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  பேட்ட படத்தின் டிரெய்லர் வீடியோ - ரசிகர்கள் குஷி

இறைவி படத்துக்கு பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் மெர்குரி. பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், மேயாத மான் இந்துஜா நடித்துள்ள இந்த படமானது கமலின் பேசும் படம் போல மௌனப் படமாகும். வசனமே இல்லாமல் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  மெரிக்குரி: திரை விமர்சனம்

மெர்குரி படமானது தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் டீசா் வெளியாகியுள்ளது. இந்த டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.