ஸ்டிரைக்க மீறி செயல்பட்ட ஐந்து பேர்

தமிழ் திரைப்படவுலகம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் ஸ்டிரைக் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்டிரைக்கை மீறி கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கிய ‘மெர்க்குரி’ படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த டிரைலரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் துல்கர் சல்மான், நித்தின், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். எனவே கார்த்திக் சுப்புராஜையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் ஸ்டிரைக்கை மீறியுள்ளதாக திரையுலகினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் வசனமே இல்லாத ஒரு மெளனப்படம் என்பதும் இந்த படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது