கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக போராடினர். உச்சக்கட்டமாக சென்னை மெரினாவில் பல லட்சக்கணக்கானவர்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடினர்.

இதை மையப்படுத்தி மெரினா புரட்சி என்ற திரைப்படம் இயக்கப்பட்டு அது சென்சாருக்கும் சென்றுவிட்டது அதை பார்த்த அதிகாரிகள் படத்தில் சிலரை குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது முக்கியமாக மத்திய மந்திரி ஒருவரையும் எம்.பி ஒருவரையும் பற்றி தவறுதலாக எடுக்கப்பட்டுள்ளது என இப்படத்தை திரையிட அனுமதி மறுத்துள்ளது.

அதனால் இப்படத்தை மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு.