சென்னை மெரினாவில் நடந்த ‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ உலக அளவில் தமிழகத்ததை திரும்பி பார்க்க வைத்தது. இந்த போராட்டாம் தொடர்பாக புதுமுக இயக்குநர் எம்.எஸ்.ராஜ் ‘மெரினா புரட்சி’ என்ற படத்தை உருவாக்கி உள்ளார்.

நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. “கலாச்சாரத்தை காப்பாற்ற ஒரு போராட்டம்” என்ற வாசகம் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை பார்த்த மத்திய திரைப்பட தணிக்கை குழு படத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை. மேலும், இதனை நடிகை கௌதமி தலைமையிலான மறுசீரமைப்பு குழுவுக்கு அனுப்பியது.

தற்போது படத்தை பார்த்த மறு சீரமைப்பு குழு ‘மெரினா புரட்சி’ படத்துக்கு மீண்டும் தடை விதித்துள்ளது. இக்குழு மறுப்பு தெரவித்தால் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு சென்று படத்தினை தணிக்கை செய்ய விண்ணப்பிக்கலாம் என்பது நடைமுறையில் உள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு, எந்த காரணமுமின்றி படத்தினை நிராகரிப்பதும், காலதாமதம் செய்வதற்கு, அந்த குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் படத்தின் தடைக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் உண்டாகிறது.

தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் ‘மெரினா புரட்சி’ படத்தை முடக்கும் எல்லா சதிகளையும் முறியடிக்க உறுதியுடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.