நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணன் நடிப்பில் வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேற்குத் தொடர்ச்சிமலை பகுதிவாசிகளின் கஷ்டங்களை அழகாக இந்த படம் பிரதிபலித்திருக்கிறது.

தமிழக கேரள எல்லையோர மலை பிரதேசத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்து இறந்த போன தொழிலாளியின் மகன் ரங்கசாமியாக இந்த படத்தில் வரும் ஆண்டனி தனது யதார்த்த நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவரின் மனைவியாக படத்தில் நடித்திருக்கும் ஈஸ்வரி என்னும் காயத்ரி கிருஷ்ணா அசல் கிராமத்து பெண்ணாக இதில் கலக்கியிருக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  அடேங்கப்பா!! கஜா புயலுக்கு விஜய் சேதுபதி இத்தன லட்சத்த குடுத்தாரா...

அப்பாவை இழந்து அம்மாவுடன் வசிக்கும் ரங்கசாமியும் அப்பாவை போல முதலாளி விசுவாசம் உடையவர். என்றாலும் சொந்தமாக காடு கழனிவாங்கி அதில் விவசாயம் பார்க்க வேண்டும் அதன் பின்னர் தான் கல்யாணம் எல்லாம் என கடுமையாக உழைக்கிறார். ஆனால் விதிவசத்தால் அவரது லட்சியம் தட்டி தட்டிப் போக மற்றவர்கள் வற்புறுத்தலால் கல்யாணம் பன்னி குழந்தை குட்டியோடு வாழ்கிறார். ஆனால் அவர் ஆசைப்பட்ட மாதிரி நிலம் வாங்கி விவசாயம் பார்த்தாரா அல்லது நல்லவர்கள் போல நடிக்கும் முதலாளிகளால் கெட்டுப்போனாரா என்பதே படத்தின் மீதிக் கதை.

இதையும் படிங்க பாஸ்-  ‘சூப்பர் டீலக்ஸ்’ ஷில்பாவுடன் நடனமாடிய காயத்ரி – வைரலாகும் வீடியோ!

கம்யூனிசம், கேப்டலிசம் என படம் பலவற்றை அழகாக விவரிக்கிறது. மேற்குத் தொடர்ச்சிமலை பகுதிகளில் வசிப்பவர்களை வைத்தே பல கதாப்பாத்திரங்களை செதுக்கியிருப்பது படத்துக்கு பலத்தை சேர்க்கிறது. ஆவணப்படம் போல உயிரோட்டமாக உள்ளது படத்தின் ஒளிப்பதிவு. தேனி ஈஸ்வரை இதற்காக பாராட்டலாம். இளையராஜாவின் இசை படத்துக்கு கூடுதல் வலுசேர்க்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  5 லட்சம் பேர் பார்த்த 'சீதக்காதி'யின் 'அய்யா' பாடல்!

இயல்பான கதையை மிகவும் யதார்த்தமாக ஆர்ப்பாட்டமில்லாமல் எடுத்திருக்கும் இயக்குநருக்கு அப்ளாஸ் அள்ளுகிறது. கிராமத்தின் நக்கல், நையாண்டி அனைத்தையும் சரியாக கையாண்டிருக்கிறார். பார்ப்பவர்களை கதையோடு ஒன்றித்து பயணிக்க வைத்திருக்கிறார். மொத்தத்தில் மேற்குத் தொடர்ச்சிமலை வெற்றி மலை.

ரேட்டிங்: 3.5/5