இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிய நிலையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் பாடல் வெளியாகவுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது வந்த புதிய தகவலின்படி இந்த படத்தின் பாடல்களை லட்சக்கணக்கானோர், ஏன் கோடிக்கணக்கானோர் பார்க்க வாய்ப்பு இருக்கின்றது.

ஆம், மெர்சல் படத்தின் ஆடியோ விழா ஜிதமிழ் தொலைக்காட்சியில் இரவு 7 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. அன்றைய தினம் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நிச்சயம் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக தொலைக்காட்சி மூலம் பார்க்க வாய்ப்பு உள்ளது