2017-ம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள்  யூ டியூப் தளத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு  நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த இந்த படம் அக்டோபர் 18, 2017-ல் வெளியானது. ஜிஎஸ்டி,  பணம் மதிப்பு இழப்பு உள்ளிட்ட காட்சிகள் இருந்ததால்  பாஜக மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து.  இதனால் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு  பெற்றது.
 படம் வெளியாகி ஓராண்டைக் கடந்தாலும், தொடர்ச்சியாக ‘மெர்சல்’ பாடல்கள் யூ டியூப் தளத்தில் சாதனை புரிந்து வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் இப்போதுவரை ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும், ‘மெர்சல்’ இசையுரிமையை வைத்திருக்கும் சோனி நிறுவனம் “’மெர்சல்’ பாடல்கள் அனைத்துமே ஒன்றிணைந்து 30 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது” என்று அறிவித்துள்ளது.

சமீபகாலத்தில் யூ டியூப் தளத்தில் ஒரு படத்தின் பாடல்கள் இவ்வளவு பெரிய இமலாய சாதனையை நிகழ்த்தியதில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.