இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் மெர்சல்.வந்த நேரத்தில் சில அமைப்புகளால் இந்த படத்திற்கு சர்ச்சை ஏற்பட அது இலவச விளம்பரம் போல் ஆகி மிகப்பெரும் வெற்றியை தொட்டது.

கடந்த ஜனவரி மாதம் பொங்கலன்று வெளியானது இந்த திரைப்படம்.

இந்த நிலையில் லண்டனை சேர்ந்த ஐரா அமைப்பு உலக அளவில் சிறந்த படங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த அமைப்பு விஜய் நடித்த மெர்சல் படத்துக்கு விருது வழங்குவதோடு விஜயை சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்து உள்ளது.