இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளி குவித்துள்ள நிலையில் தற்போது அடுத்தகட்டமாக விருதுகளை அறுவடை செய்து வருகிறது.

நேற்று பிரிட்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு சிறந்த வெளிநாட்டு மொழி படம் என்ற விருது கிடைத்துள்ளது.

இந்த விருதுக்காக உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளை சேர்ந்த 8 திரைப்படங்கள் தேர்வு பெற்றிருந்தன. அவற்றில் ஒன்றுதான் இந்தியாவில் இருந்து சென்ற மெர்சல், ஆன்லைன் வாசகர்களின் அதிகப்படியான வாக்குகள் அடிப்படையில் முதலிடம் பெற்று விருதுக்கு தேர்வானது. இந்த படத்துடன் பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன், சிலி, தென்னாப்பிரிக்கா, லெபனான், ஆகிய மொழி படங்கள் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.