விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படம் ‘மெர்சல்’. ‘தெறி’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து இருக்கிறது. இந்நிலையில், இப்படம் சுமார் ரூ135 கோடி செலவில் உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் ‘புலி’ படம்தான் ரூ.100 கோடி பட்ஜெட்டில் வெளிவந்த ஒரே படம். தற்போது இந்த படம் ரூ.100 கோடியை தாண்டி ரூ.135 கோடியில் உருவாகி அந்த சாதனையை முறியடித்துள்ளது.

அதிக பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படத்தை வாங்க போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படத்தின் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு உரிமங்கள் நல்ல விலைக்கு போயுள்ளதாக தெரிகிறது. எனவே, போட்ட முதலீட்டை இப்படம் கண்டிப்பாக திருப்பி கொடுக்கும் என்று படக்குழுவினரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.