மெர்சலும் அரசியலும்…

10:45 காலை

தீபாவளி அன்று இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளியான நடிகர் விஜய் நடித்த மெர்சல்  வெளியான நாள்முதல் பல அதிரடி விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளே இக்கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக பாஜக கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் ஃபில்ம்ஸிடம், சர்ச்சைக்குரிய காட்சிகளையும் வசனங்களையும் நீக்கும்படி பலமான கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

ட்விட்டர், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் #மெர்சல் டிரெண்டிங் தலைப்பாக மாறியுள்ளது. ஜி.எஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளையும் வசனங்களையும் நீக்கக் கோருவது ஜனநாயக ஆட்சிக்கு சரியானது அல்ல என்று பலர் இந்தப் படத்திற்கு ஆதரவளித்துள்ளப்பதோடு, பி.ஜே.பி அடக்குமுறை அரசியில் செய்வதாகவும், கருத்து சுதந்திரத்தில் கைவைப்பது குடியரசின் பாணி அல்ல எனவும் அழுத்தம் திருத்தமாக பதிவிட்டு வருகின்றனர். மெர்சல் ஆதரவு கூட்டணியில் ரசிகர்கள் மட்டுமல்லாது பெரும் பிரபலங்கள் கைக்கோர்ப்பது இன்னும் சூடான சூழலை உருவாக்கியுள்ளது.

 

இதற்கிடையில் பி.ஜே.பி கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்துகளை ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்தக் கருத்துகளின் மதவாதத்தையும், ஒற்றுமைக்கு எதிரான சிந்தனைகளை அளிப்பதாகவும் உள்ளதை பலராலும் மறுக்க முடியவில்லை. ராஜாவின் ட்வீட்களில் ஒன்றான “ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்புதான் ‘மெர்சல்’” என்று கூறியுள்ளார். ஒருவரின் கருத்திற்கு அவரின் மதத்தை முன்னோட்டமாக சாடுவது சரியல்ல என்று சமூக வலைதளங்களில் இவருக்கு பலர் தங்களின் கோபத்தையும் வெறுப்பையும் காட்டிய வண்ணம் உள்ளனர். மேலும் “கடந்த 20 வருடங்களில் 17,500 கிறிஸ்துவ ஆலயங்கள், 9,700 மசூதிகள்மற்றும்370 கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவமனைகளைக் கட்டுவதற்கு இதில் எதை தவிர்த்திருக்கலாம்” என்று நக்கலாக கூறியிருப்பது ஒரு நல்ல அரசியல்வாதியின் போக்கல்ல என்றும், இந்தியா பிரஜையின் கருத்தாக எடுக்காமல் மதத்தை முன்னொட்டி பேசுவது பி.ஜே.பி கட்சியின் நோக்கத்தை பிரதலிப்பதகாவும் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இவரின் இந்த மதம் சார் ட்வீட்கள் பி.ஜே.பி கட்சியின் மேலான அதிருப்பதியை அதிகரிப்பதை மறுப்பதற்கு இல்லை.

 

பி.ஜே.பி கட்சியின் தமிழ் நாட்டு தலைவர், தமிழ்சை சவுந்தரராஜன், ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகளை நீக்க கோரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதைப் பற்றி கூறுகையில், படத்தில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன எனவும் டிஜிட்டல் வழி பணம் செலுத்துதல் மற்றும் கோயில்கள் பற்றிய தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன அவற்றை நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விமர்சனங்கள் ஒரு புறம் இருக்க, அரசியில் பிரபலங்களான சிதம்பரம், ராகுல் காந்தி, மு.க ஸ்டாலின்ஆகியோரும் திரை பிரபலங்களான நடிகர் அர்விந்த் சாமி, நடிகை குஷ்பு, திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், நடிகை ஸ்ரீபிரியா, நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், RJ பாலாஜி. இது மட்டுமல்லாமல் கிரிகட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் ஆதரவும் மெர்சல் படத்திற்கு வலுத்து வருகிறது.

மாநில ஊடங்களுடன் சரிசமமாக தேசிய ஊடங்கங்களும் இப்படத்திற்கு ஆதரவளித்தும் எதிர்ப்ப்பு தெரிவித்தும் ஒரு பட்டிமன்றமே நடத்தி ஒரு தேசிய பிரச்சனையாக இப்படம் மாறியுள்ளது வியப்பையே ஏற்படுத்துகிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தேர்தல்சமயத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து இருவரும் வாழ்த்து தெரிவித்து கொண்டதும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடியின் துணிச்சலான செயல் என்றும் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

Mangala Mary

The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com