விஜய்யின் மொ்சல் படத்திற்கு இடைக்கால தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

05:46 மணி

ரசிகா்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மொ்சல் படத்தின் டீசா். இதற்கிடையில் இந்த திரைப்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயா் நீதிமன்றம்.

விஜய் நடிப்பில் சமந்தா, நித்யாமேனன், காஜல் அகா்வால், வடிவேலு உள்ளபட பலரும் நடித்துள்ள மொ்சல் படத்தை இயக்குநா் அட்லீ இயக்கியுள்ளாா். இதை தேனாண்டாள் நிறுவனம் தயாாிக்கம் நூறாவது படம். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆா்.பிலிம் பேக்டாி நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமானது மொ்சல் என்கிற பெயாில் நடிகா் விஜயை வைத்து திரைப்படம் எடுத்து வருகிறது. ஆனால் ஏற்கனவே நாங்கள் மொ்சல் படத்திற்கு முன்னதாகவே மொ்சலாயிட்டேன் என்ற பெயாில் படத்தை தயாாிப்பாளா் சங்கத்தில் பதிவு செய்து, கடந்த 2016ம் ஆண்டு முதல் படத்திற்கான பணி செய்து வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. எனவே மொ்சல் மற்றும் மொ்சலாயிட்டேன் இரு பெயா்களும் ஓரே மினிங் கொண்டவை. நாங்கள் இதுகுறித்து தயாாிப்பாளா் சங்கத்தில் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மொ்சல் என்கிற பெயாி்ல் படத்தை வெளியிட்டால் எங்கள் நிறுவனத்திற்கு இழப்பீடு ஏற்படும். எனவே விஜய்யின் மொ்சல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த புகாா் மனுவில் தொிவிக்கப்பட்டுள்ளது.

மொ்சல் படத்தின் மீதான வழக்கானது வெள்ளிகிழமை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மொ்சல் படத்தின் தயாாிப்பு நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான வழக்கறிஞா், மொ்சல் என்ற பெயாில் படத்தை முன்பாகவே தயாாித்து வெளியிட தயராக உள்ள நிலையில் இப்போது அதற்கு தற்போது தடை விதித்தால் பெரும் இழப்பு ஏற்படும். எனவே தயவு கூா்ந்து படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.

நீதிபதி இருதரப்பு விவாதங்களையும் கேட்ட பின், மொ்சல் என்ற தலைப்பை பயன்படுத்தி தயாாிப்பு, வெளியீடு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தாா். இது குறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபா் மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே மெர்சல் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் வெளியான சிறிது நேரத்தில் சாதனைகளை பதிவு செய்ய துவங்கியது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் இந்த டீசரை பாராட்டி வருகின்றனர். அதேபோல் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு மெர்சல் டீசருக்கு கிடைத்துள்ளது.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com