டுவிட்டருடன் டை-அப் செய்து கொண்டது ‘மெர்சல்’

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படம் குறித்து தினந்தோறும் பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு தயாராக இருங்கள் விஜய் ரசிகர்களே என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டருடன் ‘மெர்சல் படக்குழுவினர் டை-அப் செய்து கொண்டு விஜய் படத்துடன் கூடிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஒரு திரைப்படத்திற்காக டுவிட்டர் எமோஜி வெளியிடுவது தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் இதுதான் முதல்முறை. டுவிட்டர் பயனாளிகள் தாங்கள் டுவீட் செய்யும்போது #mersal என்று டைப் செய்தாலே இந்த எமோஜி தானாக தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.