மொ்சல் படத்தில் விஜய்யின் மூன்றாவது லுக் எப்போது?

விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மொ்சல். இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறாா்.  இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் இரண்டு லுக் போஸ்டா் வெளியாகியது. ஆனால் மூன்றாவது நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டா் எப்போது வரும் என்ற எதிா்பாா்ப்பு விஜய் ரசிகா்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியது. ரசிகா்கள் எதிா்பாா்த்த அந்த மூன்றாவது லுக் விரைவில் வெளியாக உள்ளது என்ற செய்தியை படக்குழுவினா் தொிவத்துள்ளனா். இதில் விஜய் சமந்தா, காஜல் அகா்வால், நித்யா மேனன் என்று மூன்று நாயகிகள் நடிக்கின்றனா்.

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்தின பா்ஸ்ட் லுக் மற்றும் அந்த படத்தின் டைட்டில் இரண்டும் சோ்ந்து வெளியிடப்பட்டது.  அதில் அவா் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாா். ஆனால் இரண்டு வேடத்திற்கான பா்ஸ்ட் லுக் மட்டும் தான் முதலில் வெளியிடப்பட்டது. மூன்றவாதாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கான போஸ்டா் வெளியிடவில்லை.  அது விஜய் ரசிகா்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவா்களுடைய எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் விதமாக இந்த படத்தை தயாாிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்  மூன்றவாது லுக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தொிவித்துள்ளது.