செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 12

இணையதளத்தில் புதிய மைல் கல்லை தொட்ட மெர்சல்

04:52 மணி

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீதேனான்டாள்  பிலிம்ஸ் தனது 100-வது படமாக இதை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் பாடல்களும் விஜய்யின் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

Loading...

இந்நிலையில், இப்படத்தின் பாடல்களின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை மட்டும் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். பாடலுக்கே இந்தளவுக்கு வரவேற்பு இருக்கும்போது, இப்படத்தின் டீசருக்கும், டிரைலருக்கும் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.

அதனால் விரைவில், இப்படத்தின் டீசரையும், டிரைலரையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், சத்யன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 18 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com