இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளியான நிமிடம் முதல் விஜய் ரசிகர்கள் மதியம் 2 மணியை நோக்கி காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். கடந்த சில நாட்களாகவே அஜித்தின் ‘விவேகம்’ மற்றூம் விஜய்யின் ‘மெர்சல் ஆகிய படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

நேற்று அதிகாலை 12.01 மணிக்கு அஜித்தின் விவேகம் டிரைலர் வெளியாகிய இன்று ‘மெர்சல்’ குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி உற்சாகம் அடைந்து வருகின்றனர்.