மெர்சல் உரிமையை கைப்பற்றிய அந்த நிறுவனம்

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படைப்பான இந்த படத்தில் காஜல்,சமந்தா மற்றும் நித்யா மேனன் நாயகிகளாக நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. இபடத்தின் தமிழக உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் தன்வ்சமே வைத்துக் கொண்டது.

இந்நிலையில், மெர்சல் படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை அட்மஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை ஸ்ரீ தோனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹேமா ருக்மணி  டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.