தல அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் புரமோஷன் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த படம் குறித்த ஏதாவது ஒரு செய்தி தினமும் டிரெண்ட் ஆகிவருகிறது.

இந்த நிலையில் ‘மெர்சல்’ படக்குழுவினர்களும் ‘விவேகம்’ படத்திற்கு ஈடுகொடுத்து புரமோஷன் செய்து வருகின்றனர். பொதுவாக விஜய் படம் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் புரமோஷன் பணியை ஆரம்பிப்பார்கள். அதிலும் அஜித் படத்தின் ரிலீசின்போது ஒதுங்கியே இருப்பார்கள்

ஆனால் ஆகஸ்ட் 24ஆம் தேதி ‘விவேகம்’ ரிலீஸ் என்று தெரிந்தும் அதற்கு போட்டியாக சிங்கிள் பாடல் வெளியீடு, ஆடியோ ரிலீஸ் விழா என பட்டைய கிளப்பி வருகின்றனர். இந்த நிலையில் நாளை ‘நீதானே’ என்ற மெலடி பாடலும் வெளியாகவுள்ளதாம். ‘விவேகம்’ ரிலீஸ் வரை ‘மெர்சல்’ படத்தின் புரமோஷன் பயணம் தொடரும் என படக்குழுவினர்களில் ஒருவர் கூறியுள்ளார்.