எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் அதன் பிரம்மாண்டத்திற்காகவும், நேர்த்தியான திரைக்கதைக்காகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது அனைவருக்கும் தெரிந்ததே. முந்தைய பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்த இரண்டாம் பாகத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு இருந்ததால், முந்தைய பாகத்தைவிட இரண்டாம் பாகம் ரிலீசாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. தமிழகம், ஆந்திரா மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

             அதிலும் குறிப்பாக மலையாளத்தில் ‘பாகுபலி-2’ படம் சுமார் 320 திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் வேற்று மொழி திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியான முதல் படம் ‘பாகுபலி-2’ என்ற சாதனையை பெற்றிருந்தது. அந்த சாதனையை தற்போது ‘மெர்சல்’ தகர்த்தெறிந்துள்ளது.

           ‘மெர்சல்’ படம் எல்லா தடைகளையும் தாண்டி தற்போது ரிலீசுக்கு தயராகிக் கொண்டிருக்கும்வேளையில் மலையாளத்தில் மட்டும் இப்படம் சுமார் 350 திரையரங்குகளுக்கும் மேலாக வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.