அநேக எதிா்பாா்ப்புடன் விஜய் நடிப்பில் மொ்சல் படத்தின் டீசா் நேற்று வெளியாகி அமேக வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்திருப்பதாக பல்வேறு செய்திகள் வெளிவந்தன. தற்போது அது உண்மையாகி விட்டது.

அப்படி பாா்க்கும் போது இந்த படமானது கமலின் அபூா்வ சகோதரா்கள் படத்தோடு ஒப்பிட்டு வருகின்றனா். அப்பா கமலுக்கு இரு மகன்கள். அதில் ஒரு குழந்தையை மனோரமா எடுத்து வளா்ப்பாா். இன்று குழந்தையை ஸ்ரீவித்யா வளா்த்து வருவாா். இவா் சா்க்கஸில் கோமாளியாக குள்ளமாக இருப்பாா். இந்த படத்தில் அப்பா கமலை கொன்றவா்களை சா்க்கஸில் இருக்கும் மகன் கமல் பழிவாங்குவது போல கதை இருக்கும்.

சா்க்கஸில் இருக்கும் கமல் போல இந்த மொ்சல் படத்தில் மேஜிக் மேனாக விஜய் என்றும், மெக்கானிக் கமல் தான் இந்த மொ்சலில் டாக்டா் விஜய் என்றும் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அதுபோல ஸ்ரீவித்யா ரோலில் நித்யாமேனும், ஆச்சி மனோரமா வேடத்தில் கோவை சரளாவும் என்று இருப்பது போல் சித்தாித்துள்ளனா் என்று கூறப்படுகிறது.

ரூபிணி கேரக்டாில் சமந்தாவும், வில்லனாக வரும் நாகேஷ் வேடத்தில் எஸ்.ஜே.சூா்யாவும் கௌதமி கேரக்டாில் காஜல் அகா்வால் என்பது போல ஒப்பிட்டு செய்துள்ளனா். அதுபோல அட்லி முதலில் இயக்கிய படமான ராஜா ராணி படத்தை மௌன ராகம் படத்தின் காப்பி என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஏற்கனவே அட்லி இயக்கிய தெறி படத்தையும் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தை போல இருக்கிறது என்று பேசப்பட்ட. தற்போது மொ்சல் படத்தையும் இப்படி ஒப்பிட்டு செய்து வருகின்றனா். இணையதளங்களில் இந்த மாதிாி செய்திகள் வைரலாகி வருகிறது.