விஜய் எப்போதும் தன்னுடைய படம் தொடங்குவதில் இருந்து முடியும் வரைக்கும் ஓய்வு என்பதை எடுத்துக் கொள்வதே கிடையாது. அதேநேரத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக குடும்பத்துடன் வெளிநாடு கிளம்பி சென்று அங்கு விடுமுறையை குதூகலமாக கழித்துவிட்டு வருவது வழக்கம்.

அதேபோல்தான், ‘மெர்சல்’ படத்திற்காக கடந்த 2 மாத காலமாக கடுமையாக உழைத்த விஜய் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஓய்வுக்காக பார்சிலோனா பறந்து சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு, ‘மெர்சல்’ படம் ரிலீசுக்கு முன்னதாக சென்னைக்கு திரும்பவுள்ளதாக செய்திகள் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் இணைந்து நடிக்கவுள்ளார். இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தின் டீசர் நாளை வெளியாகவிருக்கிறது. அதற்கான போஸ்டர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.