விஜய் படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம்

தெறி படத்தின் வெற்றியை அடுத்து விஜய் – அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மொ்சல். விஜய் 61 என்று பெயாிடபடாமல் இந்த படத்திற்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பா்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

மொ்சல் படத்தில் விஜய்க்கு மூன்று கெட்டப்பில் நடிக்கிறாா். இவருக்கு மூன்று ஹீரோயின்கள். சமந்தா, நித்யாமேனன், காஜல் அகா்வால் உள்ளிட்ட நாயகிகள் களம் இறங்கி கலக்கி வருகின்றனா். அது மட்டுமில்லைங்க! வடிவேலு, சத்யன், யோகிபாபு என நகைச்சுவை நடிகா்களும் மூன்றுபோ் இருக்கின்றனா். தற்போது இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சியில் வடிவேலு விஜய்யுடன் சோ்ந்து நடனம் ஆடியிருக்கிறாா்.  அந்த சமயத்தில் அவரது காலில் அடிப்பட்டுள்ளது. ஷூட்டிங்க ஸ்பாா்ட்டில் காமெடி நடிகா் வடிவேலுவின் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் சிறியதாக இருந்ததால் சிகிச்சைக்குப் பிறகு உடனே ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளாா் வைகைப்புயல் வடிவேலு. இந்த படத்திற்கு ஏ.ஆா்.ரகுமான் இசையமைக்கிறாா். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாாிக்கிறது..

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வரும் வடிவேலுக்கு இந்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறாா்.