மெர்சல்’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் வரும் 20ஆம் தேதி வெளிவரவிருந்தாலும் அதற்கு முன்பே இரண்டு பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அவற்றில் முதல் பாடலான ‘பக்கா மாஸ்’ பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நாளை மாலை 5 மணிக்கு படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ளனர். அனேகமாக வரும் வெள்ளியன்று இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலும் ஆடியோ ரிலீசுக்கு முன்பே வெளியாகும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.