விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் சிங்கிள் பாடல் அறிவிப்பின் நேரம் திடீர் மாற்றம்

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது திடீரென அந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஆம், மாலை 5 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு ‘மெர்சல்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகவிருப்பதாகவும், அந்த போஸ்டரில் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் என்றும் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி மற்றும் போஸ்டர் டிசைனர் பிரசன்னா ஆகியோர் தங்கள் டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர். எனவே விஜய் ரசிகர்களே இன்னும் அரை மணி நேரத்தில் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்