இன்னும் ஒருசில நாட்களில் ‘மெர்சல்’ பக்கா மாஸ் பாடல்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘மெர்சல்’ படத்தின் படப்ப்பிடிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் இந்த படத்தின் புரமோஷன்களும் தொடங்கும் நிலையில் உள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் வரும் 20ஆம் தேதி சென்னையில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு முன்பே ‘பக்கா மாஸ்’ பாடல் ஒன்றை சிங்கிள் டிராக்காக இணையதளத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

விஜய் படத்தின் பாடல் ஒன்று ஆடியோ ரிலீசுக்கு முன்பு சிங்கிள் டிராக்காக வெளியாவது இதுதான் முதல்முறை. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பராக வந்துள்ளதாக படக்குழுவினர் பெருமிதம் கொள்கின்றனர்.