இன்று ஆளப்போறான் தமிழன் பாடல் குறித்து ஸ்ரீதிவ்யா இப்படியா சொன்னார்?

விஜய்  நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் மெர்சல். முதன்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல்,சமந்தா,  நித்யா மேனன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இன்று ஆளப்போறான் தமிழன் என்ற சிக்கிள் ஆடியோ டிராக் யூடியூபில் வெளியானது.   வெளியன சில மணி நேரங்களில் 7 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதிவ்யா இந்த பாடல் குறித்த தனது கருத்தை ட்விட்டர் கணக்கில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,  மிகவும் அழகான பாடல். முழுப்பாடலையும் கேட்க காத்திருக்க முடியவில்லை. இயக்குனர் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், இயக்குனர் அட்லி மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என்று ஸ்ரீதிவ்யா கூறியுள்ளார்.