ஆபாசப் படவுலகில் கொடிகட்டி பறந்த மியா கலிபா அந்த படங்களின் மூலம் வெறும் 12,000 அமெரிக்க டாலர்களே சம்பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் போர்னோ கிராபி படங்களுக்கு மிகப்பெரிய சந்தையும் வணிகமும் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா இதன் தலைநகரமாக இருந்து வருகிறது. பார்ன் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகளும் அங்கே வழங்கப்படுகிறது.

அந்த வகையில் சன்னி லியோனுக்கு அடுத்தப்படியாக புகழ் பெற்றவர் மிய கலிஃபா. ஆனால் இவரும் சன்னி லியோன் போலவே போர்னோகிராபியில் நடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ’பார்ன் மூவிகளில் நடித்து நான் சம்பாதித்தது வெறும் $12,000 டாலர்கள்தான். ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு வேறு வேலை தேடுவதற்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது’ எனக் கூறியுள்ளார். 12,000 டாலர்கள் என்பது இந்திய மதிப்பின் படி 8.55 லட்சம்தான்.

இஸ்லாமிய பெண்கள் அணியும் உடை அணிந்து அவர் ஒரு ஆபாச வீடியோவில் நடித்தார். இதில் கொதிப்படைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மியா கலிபாவின் தலையை வெட்டுவோம் என மிரட்டல் விடுத்தனர். இதனால், உலகமெங்கும் மியா பிரபலமடைந்தார். அவர் நடித்த வீடியோக்கள் மூலம் கோடிக்கணக்கில் லாபம் பார்த்தனர். ஆனால், சரியான ஒப்பந்தம் இல்லாததால் மியாவுக்கு இதில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை.  அவர் ஆபாச படங்களில் நடித்தது வெறும் 3 மாதங்கள்தான்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பின் ஆபாச படங்களில் நடிப்பதை மியா நிறுத்தினார்.  அதன் பின் கூடை பந்து உள்ளிட்ட சில போட்டிகளுக்கு வர்ணனை செய்து வருகிறார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்கு கொடுத்து வருகிறார். மேலும், தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களை மீட்டெடுக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.