நடிகை ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் இந்த காதலுக்கு தந்தை கமல் மற்றும் தாய் சரிகா ஆகியோர் சமீபத்தில் சம்மதம் தெரிவித்துவிட்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஸ்ருதிஹாசனை சந்திக்க அவ்வப்போது மும்பை வரும் அவரது காதலர் மைக்கேல் கடந்த வாரமும் மும்பை வந்தார். ஸ்ருதிஹாசனின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த மைக்கேல் கார்சேல் நேற்று முன் தினம் மீண்டும் லண்டனுக்கு கிளம்பினார். அப்போது அவர் தனது டுவிட்டரில் காதலி ஸ்ருதிஹாசனை பிரிவது குறித்து பக்கத்தில் கூறியபோது, “ஒவ்வொரு முறையும் மும்பையில் இருந்து கிளம்பும் போது கவலையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

காதலரின் டுவீட்டுக்கு ஸ்ருதிஹாசனும் உருக்கமாக தனது டுவிட்டரில், “ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவருக்கு விமானநிலையத்தில் குட்பை சொல்லுவதற்கு கடினமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/MichaelCorsale/status/988609138912473088