சிம்பு நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ‘அன்பானவன்
அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்தவர் மைக்கேல்
ராயப்பன். இவர் ‘நாடோடிகள்’ உள்ளிட்ட பல படங்களை
தயாரித்தவர்.

இப்படத்திறகு, சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை. அதனால்
எனக்கு 20கோடிவரை இழப்பீடு ஏற்பட்டது. எனவே, சிம்பு இந்த
பணத்தை தனக்கு திருப்பிதரவேண்டும் என்று தயாரிப்பாளா்
சங்கத்தில் புகார் செய்தார்.

சிம்பு ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பித்தர ஒப்புக்
கொண்டதாகவும், ஆனால் பணத்தை திருப்பித்தரவில்லை
என்று தெரிகிறது.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘செக்கச்
சிவந்த வானம்’ வெளியாக உள்ள நிலையில், சுந்தர்.சி
இயக்கும் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, மைக்கேல் ராயப்பன், சிம்பு தனக்கு இழப்பீடு
தொகையை கொடுக்கும்வரை வேறு எந்த படத்திலும் நடிக்க
தடைவிதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
அளித்திருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

‘சிம்புவால் நஷ்டமைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும்.
இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இருக்கிறேன். எனது
பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில்
நடிக்கக்கூடாது. இப்போது அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில்
நடிக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்க
இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து
தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்பு கொண்டு மீண்டும் புகார்
செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்ககூடாது.
தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்’
என்று கூறியுள்ளார்.