அன்பானவன்  அடங்காதவன் அசராதவன் என்ற படத்தை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வந்த இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது.

படம் வெளிவந்து சில நாட்கள் கழித்த பிறகு மைக்கேல் ராயப்பன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சிம்பு இந்த படத்தில் தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டதாகவும், சரியாக ஷூட்டிங் வராமல் தாமதம் செய்ததாகவும், நீண்ட நாட்கள் படம் தயாரிப்பில் இருந்ததாகவும் தனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய சிம்பு தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படம்- காதலை தேடி நித்யானந்தா

இது போல் தற்போது சிம்புவும் மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன் மீது அவதூறு சொல்வதாக மைக்கேல் ராயப்பன் மீது 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் சிம்பு.