குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இந்த படத்தின் டப்பிங்கை கூட சிம்பு பாத்ரூமில் வைத்து பேசிக்கொடுத்ததாக கூறப்பட்டது.

இந்த படத்தில் சிம்புவின் தலையீட்டாலும் படத்தில் செய்த கால்சீட் குழப்பங்களில் இருந்து கதை குழப்பம் வரை எல்லாமும் இந்த படத்தில் அமைந்ததால் படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க பாஸ்-  சர்ச்சையுடன் சேரும் சர்ச்சை – முத்தையா இயக்கத்தில் இவரா ?

சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்தார். டூப் நடிகரை வைத்து பல காட்சிகளை படமாக்கினோம். படம் முடிந்த நிலையில் அதை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்றார். இரண்டாம் பாகத்தில் அவர் நடித்துக் கொடுக்கவில்லை. படப்பிடிப்பில் அவர் ஒத்துழைப்பு அளிக்காததால் படம் திரைக்கு வந்து நன்றாக ஓடவில்லை. இதனால் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அதை சிம்பு ஈடு செய்ய வேண்டும் என மைக்கேல் ராயப்பன் கேட்டிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  மணிரத்னம் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி - பின்னணி என்ன?

ராயப்பன் அளித்த புகாரின்பேரில் தயாரிப்பாளர் சங்கத்தினர் விசாரணை நடத்தி இரு தரப்புக்கும் இடையே சமரச தீர்வு காண முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். இந்த பிரச்சனை தீராத நிலையில் சிம்பு செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்துவிட்டு சுந்தர் சி.யின் படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  3 வருட நிறைவு விழாவை கொண்டாடிய த்ரிஷா இல்லனா நயன் தாரா டீம்

இதையறிந்த ராயப்பன் வேறு படங்களில் சிம்பு நடிக்க கூடாது எனக்கு பணம் செட்டில் செய்துவிட்டுத்தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தை வலியுறுத்தியுள்ளார் ராயப்பன்.